விஜயகாந்த் மறைவு | தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் 2024 ஆம் ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது.
இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளார்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்.13-ம்தேதி பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும்.
இதையும் படிங்க: Kerala Assembly 2024 | “ரேஷன் கடைகளில் பிரதமரின் படம்.. ”- கேரள முதல்வர் அதிரடி!
அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14-ம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும்.
15-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (பிப்.23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார் .
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757295491702776015?s=20
விஜயகாந்த் மறைவு: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச.28-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடலுக்கு முதல்வரின் உத்தரவு படி அரசு முழு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்நிகழ்வில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து இரண்டு மணித் துளிகள் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.