சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.அப்போது பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ”தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.அதன் பிறகு வினாக்கள் விடை நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.