மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக,தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2034 ஆம் ஆண்டு டிச.4-ம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த சூழலில் புயல் பாதிப்புக்கான இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட்டு, முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய குழுவை அனுப்பும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றமா..!சென்னையில் எந்த பகுதியில் தெரியுமா?
அதனை தொடர்ந்து மிக்ஜாம் புயல் பாதிப்பை கண்டறிய மத்திய குழுவை அனுப்பி வைத்தது. அப்போது புயல் சேதம் குறித்து மத்திய குழு பாதிப்பு குறித்த விரிவான விவரத்தை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் , 2024-25 ஆம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக மொத்தம் 683 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில், முதற்கட்டமாக, 276 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு
வழங்க முடிவு செய்து உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு முதற்கட்டமாக 115 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு அதாவது 2023 ஆண்டு ஏற்பட்ட மழை ஏற்பட்ட வெள்ளத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 160 கோடி ரூபாயை விடுவிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.