ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு..!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத மளிகைப் பொருள்களை விரைவாக அளிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலை கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளள்து.

நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகளை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts