2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு (TNBudget 2024) அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ளார் .
இதில் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது :
பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு
பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ₹100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு
2030க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு இதன்மூலம் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும், ஏரிகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு
நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு
வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்
சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு
நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு
அடையாறு நதி சீரமைப்புக்கு ₹1500 கோடி ஒதுக்கீடு
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு
Also Read : https://itamiltv.com/vao-son-selected-as-law-judge/
சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ₹430 கோடியில் புதிய திட்டம்
கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ₹17 கோடி ஒதுக்கீடு மேலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டிலேயே அகழாய்வுக்கு (TNBudget 2024) பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது