சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணிக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பரிசை அறிவித்துள்ளார்
இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் மோதியது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 – 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கெத்தாக கைப்பற்றியது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது 4-வது முறையாகும். ஏற்கனவே இந்தியா 2011, 2016, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .

இதையடுத்து ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு விளையாட்டு ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக அரசின் சார்பில் 1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறிருப்பதாவது :
4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க அற்புதமான சாதனை.
இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு 1.10 கோடி வெகுமதியாக அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .