சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது :
சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் நேற்று (8-9-2023) மாலை எதிர்பாராதவிதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த திருமதி கௌரி (வயது 60) என்பவர் உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த திருமதி கௌரி அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.