மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,429 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 4000 ஊக்கத் தொகை வழங்கியுள்ளார் .
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் புயல் ஓய்ந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் ஏற்படின் கீழ் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது . அதிலும் குறிப்பாக துப்புரவு பணியாளர்களின் தீவிர பனியால் இன்று சென்னை மாநகரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவர்களுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ. 4,000 என மொத்தம் ரூ. 1,37,96,000 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்துள்ளார்.