தமிழகத்தில் கொலை கொள்ளைகளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தற்போது 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் :
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்
ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்
ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்
மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்