TNPSC குரூப்-4 தேர்வு திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியீடு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 4 தேர்வு குறித்த  திருத்தப்பட்ட எவ்வித பாடத்திட்டத்தையும்  இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்மாெழியில் தகுதிப் பெற்றால் மட்டுமே பணியில் கலந்துக் கொள்ள முடியும் என அறிவித்தது. மேலும் தமிழ்மாெழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றர்களாகவும் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில்  குரூப்-4 தேர்வில்  முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில், பொது ஆங்கில பாடம் இடம்பெற்றது . அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில், குரூப் 4 தேர்வில் பொது ஆங்கில பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்பதை சுட்டிகாட்ட  பழைய பாடத்திட்ட முறை  இணையதளத்தில்  இணைக்கப்பட்டிருந்தது. பொது ஆங்கில பாடம் மீண்டும் கொண்டுவரப்பட்டதா என்கிற குழப்பம்  தேர்வர்களுக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது,  இனையதளத்தில்   இடம்பெற்ற பாட்டத்திட்டம்  நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக புதியதாக பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும். மேலும் தமிழ்மாெழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில், கொள்குறி வகை எனப்படும் ஒஎம்ஆர் முறையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்  என TNPSC தேர்வு அதிகாரி தெரிவித்தார்.

Total
0
Shares
Related Posts