பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் (Pongal Buses) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருட வருடம் 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்த பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட மக்கள் அனைவரும் வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக வருட வருடம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது .
இதுகுறித்து போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நாளை ஜனவரி12 முதல் ஜனவரி 14ம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 (Pongal Buses) சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்புப் பேருந்துகள் குறித்து மக்கள் அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுமட்டுமின்றி இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/karur-raid-raid-at-senthil-balajis-brothers-house/
ஏற்கனவே தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுகள் 1000 ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை இதற்கெல்லாம் மேல் கலைஞர் மகளிர் உரிமை தொகை என தமிழக அரசு பல மகிழ்ச்சியான செய்திகளை கொடுத்துள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
10ம் தேதி முதல் 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.