பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவை.
அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி- சிவகாமசுந்தரி, உற்சவமூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர் , சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்தலில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆணி திருமஞ்சன தரிசனம் ஞான காச, சித்தம்பா பிரமோற்சவம் நடைபெறுகிறது.
ஏழாம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.உற்சவம் ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.