இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.
இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
அந்த வரிசையில் தமிழகத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், இன்று சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உட்பட பல புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்க முடியும்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் சாதாரணமாக உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.