Tamil Nadu heat temperature : தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருவதால் சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க : மெக்சிகோவில் பேருந்து விபத்து… 18 பேர் பலி, 32 பேர் காயம்…விபத்துக்கான காரணம் என்ன?
அதுமட்டுமல்லாமல், கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய இடங்கள் பின்வருமாறு.. Tamil Nadu heat temperature
1.ஈரோடு – 108.68
2.திருப்பத்தூர் – 107.6
3.சேலம் – 106.88
4.வேலூர் – 106.7
5.கரூர் பரமத்தி – 105.8
6.தருமபுரி – 104.9
7.திருச்சி – 104.54
8.மதுரை விமான நிலையம் – 104.36
9.திருத்தணி – 104.18
10.மதுரை நகரம், தஞ்சாவூர் – 104
11.கோவை – 103.64
12.நாமக்கல் – 102.2
14.பாளையங்கோட்டை – 101.3
15.மீனம்பாக்கம் – 100.4