இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, தொல்லியல் துறை இன்று ஒருநாள் மாமல்லபுரத்தில் (mamallapuram) உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு இலவசம் எனஅறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் மத்திய தொல்லியல் துறை சார்பில், இன்று உலக பாரம்பரிய தினம் கடை பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை எந்தவித நுழைவு கட்டமணமும் இன்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொல்லியல் துறை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக மாமல்லபுரம் (mamallapuram) புராதன சின்னங்களை கண்டுகளிக்க வசூலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.