rain holiday | வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Today-is-a-holiday-for-school-colleges-in-districts-including-Chennai
Today is a holiday for school colleges in districts including Chennai

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத் தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கன்னியாகுமரி, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Today-is-a-holiday-for-school-colleges-in-districts-including-Chennai
Today is a holiday for school colleges in districts including Chennai

மேலும் திருப்பத்தூரில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Total
0
Shares
Related Posts