கோவில் உண்டியலை உடைத்து எடுத்து சென்ற திருடன்..!

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெட்டி கூடம் அடுத்த ஆர்ஆர் சர்க்கிள் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகே அமைக்கப்பட்ட உண்டியல் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கோயில் உண்டியலை திருடும் மர்ம நபர்களை பிடிப்பதற்காக அந்தப் பகுதி மக்கள் ஆர் ஆர் சர்க்கிள் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்தனர்.

இது அறியாமல் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கோவில் உண்டியலை கடப்பாரையால் உடைத்து இருசக்கர வாகனத்தில் அசால்டாக திருடி செல்கிறார்.

இந்த கொள்ளை காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து ரெட்டி கூடெம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Total
0
Shares
Related Posts