விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப் படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று (10.11.2021) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப் படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட கூடிய 1600 கட்டுப்பாட்டு கருவிகள் (CU) மற்றும் 3000 வாக்குப்பதிவு கருவிகள், (BU) விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயண மடம் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
மேற்படி இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் 2021-க்காக 1000 கட்டுப்பாட்டு கருவிகள் (CU) மற்றும் 2000 வாக்குப்பதிவு கருவிகள் (BU) 08.11.2021 முதல் BEL தொழில்நுட்ப குழுவினர் மூலம் முதல் நிலை சரிபார்ப்பு பணி (FLC)நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அ.சந்திரசேகரன், நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.