இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது. கரோனரி தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சிபைட் பிளேக் குவிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவுப் பழக்கம் மற்றும் புகைத்தல்,மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்குக் கூட மாரடைப்பு வருவதைக் காண முடிகிறது.
இதயத்தைக் காப்பதற்கான முக்கிய குறிப்புகள்…
ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான இதயத்திற்கு அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்கள், பச்சைப் பயறு (பருப்பு), பருப்பு வகைகள், முழு தானியங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்கவும். உணவில் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் போன்றவற்றையும் சேர்க்கவும்.
தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உங்கள் இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் புத்துணர்ச்சி பெறுவதற்குத் தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம்.
உங்கள் உணவில் மூலிகைகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை, பூண்டு, மிளகு, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற பல்வேறு வகையான மூலிகைகள் பல மருத்துவ குணங்களுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
இவற்றை அன்றாட வாழ்க்கையில் சரியான முறையில் கடைப்பிடிப்பவர்கள், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்தும், மற்றும் பிற நோய்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்.