தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே சற்று தலைகாட்டி வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
திடீரென பெருமழை பெய்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2409 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 325 கனஅடியாக சரிவு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 494 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 117 கனஅடியாக சரிவு
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 484 மில்லியன் கனஅடியாக உள்ளது
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் :
- செம்பரம்பாக்கம் – 85.92%
- புழல் – 73%
- பூண்டி – 81.96%
- சோழவரம் – 45.7%
- கண்ணன்கோட்டை – 96.8%