சென்னை வாசிகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்திய விமான படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி மெரினாவில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதையடுத்து விமான சாகசங்களைக் காண வரும் மக்களுக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது .
சொந்த வாகனங்களில் வருவோர் காலை 9.30 மணிக்குள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களுக்கு வர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நீண்ட நெடு நாட்களுக்கு பின் சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியினை பொதுமக்கள் இலவசமாக காண ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் இந்த பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சியில் பல விதமான சாகசங்களில் ஈடுபட உள்ளன.