ஓஎம்ஆர் சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 49 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் ஓஎம்ஆர் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தகவல் தொழில் நுட்ப விரைவு சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மூன்று சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 11 ரூபாயும், ஒரு முறை சென்ற திரும்ப 22 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 37 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 345 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கார் மற்றும் ஜீப் வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 33 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 66 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 110 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 2650 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 54 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 108 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 150 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 3365 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 86 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப 170 ரூபாயும், ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க 255 ரூபாயும், மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை 5570 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளுர் வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க காருக்கு 350 ரூபாய், இலகு ரகு வாகனங்களுக்கு 400 ரூபாய், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு 1100 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.