பெட்ரோல் விலையை தாண்டிய தக்காளி விலை – சாமானியர்கள் அதிர்ச்சி..!

சென்னையில், பெட்ரோல், டீசல் விலைக்கு இணையாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பருவமழைக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், நடுத்தர குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் மழை காரணமாக சில இடங்களில் முதல் ரக தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை அல்லாத பிற பகுதிகளில் தக்காளியின் 1 கிலோ விலை 120 ரூபாய் முதல் 150 வரை விற்கப்படுகிறது.

பருவமழை முன் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.40-ஆக இருந்த நிலையில் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.50-ல் இருந்து ரூ.70-கவும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-ஆக அதிகரித்துள்ளது. அவரைக்காய் ரூ.40-ல் இருந்து ரூ.75-க்கும், உருளைக்கிழங்கு ரூ.25-ல் இருந்து ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருபக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால்  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Total
0
Shares
Related Posts