Flower Show : ஊட்டியில் நாளை வெள்ளிக்கிழமை (10.05.24) 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. எனவே, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி நாளை தொடங்கி 20-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை ரோஜா கண்காட்சியும் ஊட்டி ரோஜா பூங்காவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : May 9 Gold Rate : குறைந்தது தங்கம் விலை!
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள மலர் கண்காட்சியையொட்டி (Flower Show) நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..
நீலகிரி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : 3 Yrs of DMK Govt மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!