திருச்சியில் வாடிக்கையாளர்களின் நாக்கின் நுனியை இரண்டாக வெட்டிய விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு மருத்துவத்துறை சிறப்பு குழு அமைத்துள்ளது.
திருச்சியில் இயற்கைக்கு புறம்பாக Body Modification Culture என்ற பெயரில் கண்களுக்குள் பெயிண்டிங் செய்துகொள்வது, நாக்கை இரண்டாக கிழித்துக்கொள்வது, அதற்கு வர்ணம் தீட்டிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதுடன், பலருக்கு இதே போன்று body modification செய்த ஹரிகரன், ஜெயராமன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேர் மீது பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்தல், பெண்களுக்கான பாதுகாப்பின்மை, பயிற்சி பெறாமல் மருத்துவம் பார்ப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது – அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!!
மேலும் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் நடத்தி வந்த டாட்டூ சென்டருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் டாட்டூ கடையில் உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் நாக்கின் நுனியை இரண்டாக வெட்டிய விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு மருத்துவத்துறை சிறப்பு குழு அமைத்துள்ளது.