கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி (பேட்வுமன்) எச்சரித்துள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலின் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரல் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகம் இன்னமும் முழுமையாக இதில் இருந்து விடுபடவில்லை.
இந்த நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி (பேட்வுமன்) எச்சரித்துள்ளார்.
வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் விஞ்ஞானி ஷி ஸெங்லி)(பேட்வுமன்’ தலைமையிலான குழுவினர், உலகில் பரவி வரும் மற்றும் பரவக் காத்திருக்கும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேட்வுமன் குழு தற்போது வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தொடர்பாக சீன நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனிதர்களை குறிவைத்து தாக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் கொரோனாவுக்கு நிகரான அல்லது அதனை விட வீரியமான வைரஸ் தொற்றுகள் விரைவில் உலகைத் தாக்கும் என எச்சரித்துள்ளது.
இதனிடையே வூஹானில் செயல்படும் இந்த சீன ஆய்வுக்கூடத்தின் விபரீத ஆய்வுகளே புதிய நுண்ணுயிர் திரிபுகளை உருவாக்கி, கொரோனா போன்ற வைரஸ் பரவல்கள் வெளிப்பட காரணமாக இருப்பதாக, பேட்வுமன் தலைமையிலான ஆய்வுக்கூடம் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.