Toxic Relationship-கான முக்கிய அறிகுறிகள் இவைதான்…
தன் இணையை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒருவர் துன்புறுத்துவது தான் Toxic Relationship.
இந்த வகையான உறவில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருப்பதை விட வலியும், கவலையும் தான் அதிகம் இருக்கும். கீழ்வரும் அறிகுறிகள் உங்கள் துணையுடன் இருக்குமானால் நீங்கள் நிச்சயம் கவனமுடன் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டியிருக்கும். ஒரு சில எடுத்துத்துக்காட்டுகள்..
காலையில் எழுந்தவுடன் ஒருவருக்கொருவர் `குட் மார்னிங்’ சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். அது விதி கிடையாது.
ஆனால், என்றாவது ஒரு நாள் மறந்துவிட்டு இன்னொருவருடன் பேசிவிட்டால், உடனே அதை வைத்துச் சண்டை போடுவது. இது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சேர்த்து பொருந்தும்.
நீங்க தெரியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டால்..அதை மிகப்பெரிய காரணமாக்கி, உனக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியாதா? எங்கயாவது போய் இதெல்லாம் கத்துக்கிட்டு வா.. இதுக்குதான் உன்ன மாதிரி முட்டாள் கூட சகவாசம் வைக்க கூடாது.
சில நேரங்களில் நீங்கள் உங்கள் துணையை மிஸ் பண்ணும் பொழுது, நேரில் பார்க்க ஆசைப்பட்டால்.. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.. நான் ரொம்ப பிசியா இருக்கேன். டைம் இருக்குறப்போ சொல்றேன் மீட் பண்ணலாம் என்று கூறுவது.
என்ன இன்று ஒரு போன் கால் கூட செய்யவில்லை என்று நீங்கள் கேட்டால்.. எனக்கு நேரமில்லை. பிசியா இருந்தேன். உனக்கு தினமும் போன் பண்ணி பேசிட்டே இருப்பாங்களா? உனக்கு வேற வேலையே இல்லையா? போய் எதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு.. என்று கூறுவது.
நீங்கள் ஒரு சில நாட்கள் பேசாமல் இருந்தால் கூட, உங்களிடம் இருந்து போன் அழைப்புகள் கூட இல்லாவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு தேவை இருந்தால் மட்டும் உங்களை தொடர்பு கொள்வது.
ஆசை ஆசையாக அவர்களுக்கு பிடித்த பொருளை வாங்கிச்செல்லும் போது.. இதுதானா? இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா.. இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல.. என்று கேலி செய்து உங்களை உதாசீனப்படுத்துவது.
அவர்களுக்கு பிடித்த உணவை தெரிந்துகொண்டு நீங்களே சமைத்து கொண்டுபோய் கொடுத்தாலும்.. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு.. சமைக்க தெரியலைனா எதுக்கு இதெல்லாம் செய்யனும் என்று கூறுவது. (ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்)
உறவினர்களையும், நண்பர்களையும் கேலி செய்து பேசுவது. நல்ல உடை அணிந்தால் கூட சந்தேகப்படுத்தல். உன்னை விட நான் பெரிய ஆள். நீ எப்போமே எனக்கு கீழ தான் என்று உங்களை மட்டம் தட்டுவது.
சின்ன விஷயங்களுக்கு கூட உங்களை உடலளவில் துன்புறுத்துதல். அவர்களின் உடல் தேவைகளுக்கு மட்டும் உங்களை பயன்படுத்தி கொள்ளுதல். அந்த நெருக்கத்திலும் துளியும் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தாமல் இருப்பது.
உங்கள் உடல் அமைப்பு குறித்து உருவ கேலி செய்வது. உனக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை. என்னுடன் சேர்ந்து எங்கும் வெளியில் வராதே என்று கூறுவது.
இதெயெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம். மாதா மாதம் 1ஆம் தேதி ஆகிட்டா மட்டும் உங்களுடன் வலிய வந்து பேசி பணத்தை கறந்து செல்வது. இந்த அறிகுறி எல்லாம் இருந்தா நீங்க ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்திற்கும் அப்படியே மாறாக நேர்மையாக உங்களுடன் உங்கள் துணை இருக்கிறார் எனில், முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள் பெண்களே..
ஆண்களே உங்களிடம் ஒரு பெண் மேற்கூறிய அனைத்திற்கும் அப்படியே மாறாக இருந்தால் உள்ளங்கையில் பத்திரமாக மூடி வைத்துக்கொள்ளுங்கள்..