இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால்..!

train-strike-on-january-1-fishermen
train strike on january 1 fishermen

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

train-strike-on-january-1-fishermen
train strike on january 1 fishermentrain strike on january 1 fishermen

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம்  மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 31-ம் தேதிக்குள் விடுவிக்காவிடில் ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயிலை, தங்கச்சிமடம் பகுதியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts