கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன..? சொந்த பந்தங்கள் நமக்கென வரன் தேடுவார்கள். பக்கத்து வீட்டில், அறிந்தோர் தெரிந்தோர், தரகர் என ஒரு மிகச் சிறிய வட்டத்தினுள்ளேயே மணமகனையோ, மணமகளையோ தேடிக்கொண்டிருந்தோம்.
பத்தில் ஒன்று என்ற அடிப்படையில், எது நல்ல வரன் என ஆராய்ந்து தேர்ந்தெடுத்த காலம் மாறி, இன்று ஆயிரத்தில் ஒன்றல்ல லட்சங்களில் ஒருவன் ஒருத்தி என தேர்வுகள் அதிகமாகி , இதில் எது நல்ல வரன் மற்றும் நமக்கு பிடித்த வரன் என தேடிக்கொண்டிருகின்றோம். ஆம் மேட்ரி மோனி விளம்பரங்கள் அப்படி தான் சொல்கின்றன.
குறிப்பாக, இந்த தேடலின் போது வித்தியாசமான வகையில் தங்கள் விளம்பரங்களை மணமகன்/ மணமகள் தரப்பினர் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதை தெரிவித்த விதம் ஆகும்.
செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், சாட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணமகன் தேவை என்ற தலைப்பில் செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், 24 வயதான எம்.பி.ஏ. படித்துள்ள அழகான பணக்காரக தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், டாக்டர், தொழிலதிபர் மணமகன் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Future of IT does not look so sound. pic.twitter.com/YwCsiMbGq2
— Samir Arora (@Iamsamirarora) September 16, 2022
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்ய வேண்டாம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பெண் வீட்டாரை தொடர்பு கொள்ள இ-மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மணமகன் தேவை என செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் ‘சாப்ட்வேர் இன்ஜினியர்கள்’ தயவு செய்து போன் செய்ய வேண்டாம்’ என அறிவுறுத்தி உள்ள சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது மற்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.தற்பொழுது இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.