கோவை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து, சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது, கிளை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு திரும்பிய தூத்துக்குடியில் இருந்து கரி கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியொன்று எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமுகை காவல்துறையினர் இவ்விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.