Dinakaran Speech : தானும் ஓபிஎஸ் ம் இணக்கமாக உள்ளோம் என்ன ஆனாலும் ஓபிஎஸ் உடன் தான் தொடர்ந்து செயல்படுவேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது துணைவியார் அனுராதா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்
கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் கோவிலுக்குள்ளே சென்று கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் .
அபிராமி அம்மன் சன்னதியில் கோவில் குருக்கள் கணேச குருக்கள் கோவில் பரிவட்டம் கட்டி கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.
Also Read : https://itamiltv.com/12th-class-public-examination-kovai-district-collector-surprise-inspection/
தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது :
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் தானும் ஓபிஎஸ் ம் இணக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார் .
ஓபிஎஸ் உடன் தான் தொடர்ந்து இணைந்து செயல்பட (Dinakaran Speech) உள்ளதாக தெரிவித்த தினகரன் பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டாலும் தங்களுக்கு என்று குக்கர் சின்னம் உள்ளதாகவும் தெளிவான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.