கடந்த பிப்ரவரி 6- திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து கஹ்ரமன்மாராஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பல கட்டிடங்கள் சரிந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட நடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5000 க்கும் மேற்பட்டர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
பல கட்டிடங்கள், வீடுகள் முற்றாக உருக்குலைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. மேலும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க இந்தியாவில் இருந்து 2 குழுக்கள் துருக்கி சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தினால் நாடே உருக்குலைந்துள்ளது. உயிரிழப்புக்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், தற்போதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11200 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதில், துருக்கியில் 8574 பேரும், சிரியாவில் 2662 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Little Girl protecting her little brother’s head while they’re trapped under building debris…#earthquake #earthquakeinturkey #Turkey #earthquaketurkey #Syria #syriaearthquake #Turkiye #Turkish pic.twitter.com/UHUhEIYS3b
— Jyot Jeet (@activistjyot) February 7, 2023
மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மிகும் வீடியோக்களும் சமூக வலத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அடியில் உயிருடன் சிக்கியிருந்த சிறுமியை மீட்புக்குழுவினர் மீட்கும் நெஞ்சை பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
Rescue operation going on in #Turkey #Turkey #TurkeyEarthquake #Turkiye #Turkish #TurkeyQuake #turkeyhelp #turkifsa #Turquia #Syria #syriaearthquake #Syria_earthquake #Syrian #PrayForTurkey #PrayForTurkeyAndSyria #earthquakeinturkey #earthquake pic.twitter.com/zRoK2T0uQK
— RED SALUTE (@Gadhwara27) February 7, 2023