இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக தலைமையை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வதிற்கு போட்டி நிலவியது.அப்போது அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் பொது கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தது.இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் ஓ.ஓ பன்னீர் செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த சூழலில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என கூறி ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி வசம் அமைத்ததால், கட்சியும், சின்னனும் அவருக்கு தான் என்று உறுதியானது.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில், வழக்கு நிலுவையில் உள்ளதால் தமது கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
இதையும் படிங்க: ஒரு பக்கம் இரட்டை இலை வழக்கு; மறுபக்கம் தேர்தல் தேதி எலெக்சன் ஃபீவர் ஸ்டார்ட்!
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானதை தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. சிவில் நீதிமன்றங்களில் அதிமுக தொடர்பான வழக்குகளில் இதுவரை இறுதி தீர்ப்பு வழங்கவில்லை. சட்டவிரோதமாக கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளாராக அறிவித்துக் கொண்டார்.
2022 ஜூலை 11-ல் சட்ட விரோதமாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி பழனிசாமி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். 2022 ஜூன் 28ல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார். 2028 டிசம்பர் 28 வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது.
எனவே வேட்பாளர்களுக்கு ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்த்திற்கு எழுதிய கடிதத்தில் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியானது இன்று மாலை 3 மணியளவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதே 3 மணியளவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.