புதுச்சேரியில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அஜித் என்பவரை பார்க்கச் சென்ற அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோர் கைதி அஜித்துக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கைதியின் நண்பர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறைச்சாலை காவல் துறையினர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, பிஸ்கெட் பாக்கெட்டுகளுக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் அடுத்து வழக்குப்பதிவு செய்த காலாப்பட்டு காவல் துறையினர், ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.