எம்ஜிஆரின் சகோதரரின் மகள் லீலாவதி உடல் நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் இன்று அதிகாலை காலமானார்.
எம்.ஜி.ஆரின் சகோதரரும் திரைப்பட நடிகருமான சக்கரபாணியின் மகள் லீலாவதி. அவர் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்து அவதியுற்ற போது தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தார்.
37 ஆண்டுகள் ஒற்றை சிறுநீரகத்துடன் வாழ்ந்து வந்த லீலாவதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். லீலாவதியின் மரணம் அதிகமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவிற்கு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.