திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகளை வீட்டில் வளர்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தால் சாலைகளில் சுற்றித்திரிகின்றன.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டத் தவறினால் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.