யாரடி நீ மோகினி தொடரில் நடித்து புகழ்பெற்ற சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிஆர்பியில் சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் நடிக்க சமீபத்தில் தான் தொடங்கியது அந்த சீரியல். முதல் வாரத்திலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து.
இந்த சீரியலின் ஹீரோயின் சைத்ரா ரெட்டி இதற்கு முன் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து புகழ்பெற்றவர்.
இந்நிலையில் சைத்ரா ரெட்டி, கயல் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
“கயல் ஷூட்டிங்கில் காயமடைந்துவிட்டேன். ஷூட்டிங்கில் என் கியூட்டான வெஸ்பாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன்.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நன்றாக உணர்கிறேன். மெசேஜ் அனுப்பிய எல்லோருக்கும் நன்றி.” என சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.