முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை!

medical-insurance-scheme-of-tamil-nadu-government
medical insurance scheme of tamil nadu government

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதனை அடுத்து முதல்வர் முகஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காப்பீட்டு திட்டம் ஜனவரி 11 வரை உள்ள நிலையில் 2027 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

medical-insurance-scheme-of-tamil-nadu-government
medical insurance scheme of tamil nadu government

மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.1,248.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய மக்கள் நல்வாழ்வு, வருவாய், நிதித்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts