பீகாரில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பீகாரில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணை தடுப்பூசிகளை விரைந்து செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில் அமமாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அமமாநில அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் மக்கள் விரைந்து செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்கள், வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு நபருக்கு டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.