சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவோடு, 50 எம்.எல்.ஏக்களுடன் சிவசேனா ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த கலக எம்.எல்.ஏ-க்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்ஸாம் குவஹாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்.எல்.ஏக்களும் இதர கட்சிகள்,சுயேட்சைகள் என 10 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படு டென்ஷனில் உள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே. முதற்கட்டமாக 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையையும் உத்தவ் தாக்கரே மேற்கொண்டுள்ளார்..
இந்த நிலையில், கலக எம்.எல்.ஏ-க்கள் பாலாசாஹிப் தாக்கரேவின் பெயரை பயன்படுத்துகின்றனர். அதாவது ”சிவசேனா பாலசாஹிப்” என தங்களை பிரகடனப்படுத்தி சிவசேனா ஆட்சிக்கு எதிராக கலக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் நீடிக்கும் தலைவலியால் படு டென்ஷனாகியிருக்கிறார் உத்தவ். இந்த நிலையில் பாலாசாஹிப் பெயரை பயன்படுத்தியதற்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் உத்தவ் கூறியிருப்பதாக தனியார் செய்தி நிறுவனமான ANI-வில் வெளியான செய்தியில்;
“சிலர் தன்னிடம் ஏதாவது சொல்லும்படி கேட்கின்றன்றனர். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ செய்துகொள்ளட்டும்.அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் அதில் எவரும் பாலாசாஹிப் தாக்கரேவுடைய பெயரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது” என எச்சரித்துள்ளார்.