கலைஞர் மகளிர் உரிமை தொகையில் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர் . இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன இதையெல்லாம் பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல் உண்டாகிறது எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று எதிர்பார்ப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
மீனவர்கள் தான் மக்களுடைய காவலர்கள். புயல்,மழை, வெள்ளம் என எது வந்தாலும் முதலில் களத்திற்கு வந்து மக்களை மீட்பது மீனவ மக்கள் ஆகிய நீங்கள் தான். அப்படிப்பட்ட உங்களை சந்திக்கும் போது கூடுதல் உற்சாகம் பிறக்கின்றது.
சுயமரியாதை திருமண சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா அவர்கள் தான். அதன் பிறகுதான் தமிழ்நாடு எங்கிலும் சுயமரியாதை திருமணங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.
Also Read : நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
இந்த திருமண அரங்கை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில், அதிமுக கூட்டணியில் பிற கட்சிகள் சேர்வதற்கு ரூ.100 கோடி வரை பேரம் பேசி கேட்கிறார்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட கட்சிகள் இருக்கும்போதும், நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் 100% வெற்றியை பெற்று தந்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகையில் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர் . இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன இதையெல்லாம் பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல் உண்டாகிறது எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று எதிர்பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.