அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உ.பி. சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா வெளியிட்ட வீடியோவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார் .
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும்.
அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.இதற்க்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர் மீது நடவடிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என உத்தரபிரசேத மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் வீடியோ மூலம் அறிவித்திருந்தார் . சாமியாரின் அந்த வீடியோ இணையத்தில் செம வைரலானது.
அந்த வீடியோவில் அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை காட்டினருந்தார் .
அயோத்தி சாமியாரின் இந்த பகீர் கிளப்பும் வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வீடியோவுக்கு அமைச்சர் உதயநிதி தக்க பதிலடி கொடுத்துள்ளார் .
“உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி விலை பேசி உள்ளார். எதற்கு பத்து கோடி?, 10 ரூபாய் சீப்பை வைத்து நானே என் தலையை சீவிக்கிறேன். நீ சாமியார் தானே உன்கிட்ட எப்படி 10 கோடி இருக்கும்? நீ என்ன Duplicate சாமியாரா?” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.