தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இன்று 384 ஆவது பிறந்தநாள். கி.பி. 1639 இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி தங்களது வியாபார சூழ்ச்சியால், தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த ஆகஸ்ட் 22 ஆம் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது . இதுமட்டுமின்றி இன்றைய நாள் சென்னை தினமாக கொண்டாட பல வரலாற்று கதைகளும் உண்டு.
இந்நிலையில் சென்னையின் 384-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார் .
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் கூறிருப்பதாவது :
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய #Madras-ஐ சென்னை என பெயர் மாற்றி அதன் கட்டமைப்பை செதுக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
சிங்கார சென்னை, சிங்கார சென்னை 2.O திட்டங்களின் மூலமாக சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அடுத்தடுத்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்தி, நம் மாநகரின் புகழை உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
புயல் – மழை – வெள்ளம் என எத்தனை பேரிடர்களை சந்தித்தாலும், உடனே மீண்டு வந்து வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கும் – அதன் மக்களுக்கும் 384-ஆவது #ChennaiDay வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது