லெபனான் நாட்டில் நடைபெற இருக்கும் ஆசிய டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரருக்கு ஊக்கத்தொகை கொடுத்து வாழ்த்தியுள்ளார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
லெபனான் நாட்டின் தலைநகரான தலைநகர் பெய்ரூட்டில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ள ஆசிய டேக்வாண்டோ போட்டியில் சென்னையைச் சேர்ந்த டேக்வாண்டோ வீரரான லோக பிரதீப் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் போட்டியில் கலந்துகொளவதற்கு முன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை லோக பிரதீப் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து லோக பிரதீப் ஆசிய டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்து நாடு திரும்ப தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.1.75 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.