பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர் கோவிலில் ஒரு முறை அடித்த பலத்த மழைக்கே சப்த ரிஷி சிலைகள் சாய்ந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .அந்த வகையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அக்கோவிலில் சுமார் 25 ஆயிரம் பேர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர் கோவிலில் பலத்தை இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்தது.அப்போது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக அக்கோவிலில் நிறுவப்பட்ட சப்த ரிஷிகளின் பிரம்மாண்ட சிலைகள் அடுத்தடுத்து சாய்ந்தன.
அந்த கோவிலில் நிறுவப்பட்ட சப்த ரிஷிகளின் ஏழு சிலைகளில் ஆறு சிலைகள் ரிஷி பீடத்திலிருந்து சாய்ந்து கீழே விழுந்து.சிலைகள் கடுமையாக சேதம் அடைந்தன.
ஜோதிட லிங்கத் திட்டத்தின் கீழ் சுமார் 856 கோடி ரூபாய் செலவீடில் கட்டப்பட்ட மஹாகாலேஷ்வர் கோவிலில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட ஏழு மாதங்களிலேயே சப்த ரிஷி சிலைகள் கீழே விழுந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 856 கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட சிலைகள் ஓர் ஆண்டுகூடத் தாங்கவில்லை.
இந்த திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த சிலைகள் மழை மற்றும் வெளியிலில் பாதிக்கப்படாது எனக் கூறப்பட்ட நிலையில் பலத்த காற்று வீசப்பட்ட நிலையில் சிலைகள் உடைந்து உள்ளது.
இந்த சிலைகள் எல்லாம் பிளாஸ்டர் ஆஃப் பிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.மேலும் மத்தியப் பிரதேசத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது.