பிரிட்டனில் ஒரேநாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகளில் கொரோனா தாக்கம் சற்று குறைவடைந்து வரும் நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 40 ற்க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.
இதற்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதரத்துறை தெரிவித்துள்ளது;
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 78,000க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அந்நாட்டு சுகாதரத்துறை, கொரோனா திரிபான ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிரிட்டனில் ஒரே நாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.