உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் இர்ஃபான் என்ற நபர் நிலத்திற்கு அடியில் 11 அறைகள், 2 மாடிகள் என பிரமாண்டமான வீடு கட்டியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் இர்ஃபான் என்ற நபர் நிலத்திற்கு அடியில் 11 அறைகள், 2 மாடிகள் என பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதுகுறித்த செய்தி அறிந்து சற்று தீவிரமாக விசாரித்தபோது திகிலூட்டும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
இர்ஃபான் கட்டி வரும் இந்த பிரமாண்டமான வீட்டில் பால்கனி, படிக்கட்டுகள், கிணறு, மசூதி என வீட்டிற்குள்ளேயே சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன . கடந்த 2010 ஆம் ஆண்டு தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, பூர்வீக நிலத்தில் தனக்கென ஒரு அரண்மனையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இர்ஃபானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 2011 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 12 ஆண்டுகளாக தனி ஆளாக இந்த வீட்டை அவர் செதுக்கி வருவதாகவும் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது .
நிலத்திற்கு அடியில் 11 அறைகள், 2 மாடிகள் பால்கனி, படிக்கட்டுகள், கிணறு, மசூதி என ஒற்றை ஆளாக இப்படி ஒரு பிரமாண்டமான வீடு கட்டி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.