கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் குறைவடைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் மூன்றாவது அலை வீச தொடங்கி உள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் வீட்டுதனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-வது நாளில் தனிமைக்காலம் நிறைவடையும் என்றும் மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

அதில், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-ஆவது நாளில் மறுபரிசோதனையின்றி வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும், மூச்சு விடுதல் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.