2 நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Amit Shah )இராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய மோடி அரசின் கடந்த 9 ஆண்டு சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்தை நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இதற்காக இரு நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Amit Shah) தமிழகம் வந்துள்ளார்.

முன்னதாக ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார். இராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது.

இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.