Reporter Attacked –பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த நேச பிரபு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இவரது வீட்டையும் நேச பிரபுவின் நடமாட்டத்தையும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை முதலே வெளி ஆட்களின் நடமாட்டம் அதிகரித்ததால் சந்தேகம் அடைந்த நேச பிரபு காமநாயக்கன்பாளையம்
காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.
அப்போது நேச பிரபுவை திடீரென வந்த மர்ம கும்பல் தன்னை நெருங்கி விட்டதாகவும், தன்னைத் தாக்க துவங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :http://Assam CM-கைது செய்யப்படும் ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதல்வர் அட்டாக்!
தனது எதிர்காலமே முடிந்தது எனக் கூறி கடைசியாக பேசிய ஆடியோவுடன் கே கிருஷ்ணாபுரம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார்.
அப்போது, அலறல் சத்தமும் அந்த ஆடியோவில் கேட்கிறது. இருப்பினும் விரட்டிச் சென்றபோது மர்ம கும்பல்
நேச பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நேச பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வர, மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் அங்கிருந்தவர்கள் நேச பிரபுவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு நேச பிரபுவை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750408629126377813?s=20
மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்:
பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாக தெரிவித்தும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?
தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையை தொடர்பு கொண்ட போது காவலர் ஒருவர் ஸ்டேஷன்ல ஆள் இல்லை.. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வருமாறு கூறியிருக்கிறார்.
ஒரு காவலர் இப்படி பேசலாமா அதுவும் ஒரு செய்தியாளர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லியும் இப்படி செய்ததின் உள்நோக்கம் என்ன?
போலி திராவிட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?
செய்தியாளர் நேசபிரபு மீது கொடூர கொலை வெறி தாக்குதல்(Reporter Attacked) நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.